• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

இலங்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிடைத்த  இரகசிய தகவலை அடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையில் பொதிகள் 40 அடங்கிய 81 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply