முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 3000பேர் கைது
இலங்கை
முப்படைகளில் இருந்து தப்பித்து சென்றவர்களை கைது செய்யும் பணிகள் தொடர்வதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 194 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், 198 பேர் விமானப் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, தப்பிச் சென்றவர்களில் 330 பேரை பொலிஸார் கைது செய்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
























