மகாராஜா இயக்குநரை பாராட்டி விருந்தளித்த ஆஸ்கர் திரைக்கதை ஆசிரியர்
சினிமா
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியானது மகாராஜா திரைப்படம். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது.
மகாராஜா திரைப்படம் சீன மொழியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்றது. மேலும் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகளவில் உள்ள பலரும் இந்த படத்தை பாராட்டினர்,
இந்நிலையில் இயக்குநர் நித்திலன் ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதை ஆசிரியரான அலெக்ஸ்சாண்டர் டைன்லேரிஸ் உடன் அவரது வீட்டில் இரவு உணவு அருந்தியதை மிகவும் நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்த தருணத்தை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்" என பதிவிட்டுள்ளார்.
அலெக்சாண்டர் பர்ட்மேன் என்ற பிரபலமான அமெரிக்க திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.






















