Combo Is Back - விஜய் மில்டன் இயக்கும் படத்தில் இணைந்த பரத்
சினிமா
விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார்.
தற்பொழுது இயக்கும் படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
நடிகர் ஆரி அர்ஜுனன் இப்படத்தில் நடித்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு கடந்த வாரம் அறிவித்தது. ஆரி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் நடிகர் பரத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் பரத்-க்கு ஒரு லுக் டெஸ்ட் எடுப்பது போன்ற வீடியோக்கள் இடம்-பெற்றுள்ளது. பரத் இப்படத்தில் ஒரு ரவுடி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஜய் மில்டன் இதற்கு முன் பரத் நடிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கடுகு, போன்ற திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. மீண்டும் 8 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது.























