• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், எதிர்வரும் 03ஆம் திகதி இலங்கைக்கு  உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார்.

இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வின் போது ‘ அவுஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை விஜயத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு பேரவையின் மாநாட்டில் பங்பேற்றிருந்தார்.

இதேவேளை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply