
விரைவில் பணி 2 - ஜோஜு ஜார்ஜ் வெளியிட்ட அப்டேட்
சினிமா
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் 'பணி'. கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதன் வெற்றியை தொடர்ந்து தமிழிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றியை கண்டார் ஜோஜு ஜார்ஜ்.
சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்து இருக்கும் தக் லைஃப் திரைப்படத்திலும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிநயா, சகர் சூர்யா மற்றும் ஜுனாய்ஸ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி எஸ் இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில் பணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோஜு ஜார்ஜ் பணி 2 மற்றும் பணி 3 திரைப்படங்களை இயக்கவுள்ளார். பணி 2 முந்தைய பாகத்திற்கு தொடர்பு இல்லாமல். புது கதாப்பாத்திரங்களுடன், புது இடத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போஸ்டரை ஜோஜு ஜார்க் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.