
தேர்தலில் பெரியளவான அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை! பெப்ரல் அமைப்பு
இலங்கை
தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி இதுவரையான காலப்பகுதிக்குள் சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் -ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பில் எந்தவித இடையூறும் இடம்பெறவில்லை எனவும் இன்று காலை முதல் சுமூகமான முறையில் தேர்தல் இடம்பெற்றுவருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் சுமூகமான முறையில் வாக்களித்துவருவதனை அவதானிக்க முடிந்தது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 36 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.