
தேர்தலில் வாக்களித்தார் ஜனாதிபதி
இலங்கை
வியட்நாமில் இருந்து இன்று (06) காலை நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
நாடு திரும்பிய சிறுதி நேரத்திலேயே தனது குடியுரிமையை நிறைவேற்றியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் வியட்நாம் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (06) பிற்பகல் இலங்கை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அவருடன் 05 பேர் இந்த விஜயத்தில் பங்கெடுத்திருந்தனர்.
வியட்நாம் அரசாங்கத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலமாக இவர்கள் இன்று பிற்பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.