• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

இலங்கை

சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி. எம் சுபியான் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இவ்வாறு கருத்துதெரிவித்தார்.

இதேவேளை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நேற்று இரவு கழுவாஞ்ச்குடியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அரிசி தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் நேரகாலத்துடன் வாக்களித்து விட்டு தங்களது வீடுகளுக்கு செல்லுமாறும் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1500க்கும் மேற்பட்ட பொலிஸாரும் 87 பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை விசேட தேவையுடையவர்களுக்காக கண்பார்வை அற்றோர்களுக்காக சிறப்பு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

Leave a Reply