• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு

இலங்கை

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக வவுனியா நெளுங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் நேற்று மாலை கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுங்குளம் பொலிஸாரால் முன்னெடுத்துவருவதுடன் இன்றையதினம் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply