வெளிநாடுகளிலும் வசூல் குவிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி
சினிமா
சசிகுமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் 1-ந்தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்து பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் இப்படம் வெளியானது முதல் வசூல் குவித்து வருகிறது.
இந்நிலையில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெறும் 3 நாட்களில் $275,000 (ரூ.2.3 கோடி) வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த சசிகுமாரின் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.






















