• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உள்ளூராட்சி தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு

இலங்கை

நாளையதினம் இடம் பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி சபைகளுக்காக இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் இம்முறை மாவட்டத்தில் 447 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 144 வட்டார வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 6000 அரச ஊழியர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸாரும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply