அமெரிக்காவில் நிலநடுக்கம்- வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 புள்ளிகளாக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.ஆனால்
உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதே போல நியூ மெக்சிகோ ஒயிட்ஸ் நகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.























