
ஆன்லைன் விமர்சனங்களைப் பார்க்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன் - கார்த்திக் சுப்பராஜ்
சினிமா
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இன்று பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் திரைப்படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு பதிலாக கார்த்திக் சுப்பராஜ் " ஆன்லைன் விமர்சனங்களை பார்த்து ஒரு படத்தின் வெற்றியை முடிவு செய்யக்கூடாது என கற்றுக் கொண்டேன். அனைவருக்கும் படத்தின் மீது ஒவ்வொரு கருத்து இருக்கும். திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது, நான் திரையரங்கில் பார்த்த அனைத்து மக்களும் மிக பாசிடிவாக படத்தை கொண்டாடினர்." என கூறியுள்ளார்.