
கமல் படத்தை பார்க்க புர்கா அணிந்து சென்ற நடிகை ஸ்ரீதேவி..
சினிமா
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்த இவர் சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் உயிரிழந்தார்.
தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.
முன்னணி நாயகியாக இருந்த ஸ்ரீதேவி, கமல்ஹாசனின் ஒரு படத்தை காண புர்கா அணிந்து வந்து திரையரங்கில் படம் பார்த்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்த படம் ஹேராம், அப்போது மக்களின் பெரிய கவனத்தை பெற்ற இப்படத்தை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் காண ஸ்ரீதேவி மிகவும் ஆசைப்பட்டாராம்.
இதனால் சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்க்க புர்கா அணிந்து வந்து படத்தை பார்த்தாராம். படத்தை பார்த்து முடித்துவிட்டு கமல்ஹாசனுக்கு போன் செய்து படம் குறித்தும் பெருமையாக பேசியிருக்கிறார்.