
எலியும் பூனையுமாக விஜய் சேதுபதி- நித்யா மேனன்..! VJS52 படத்தின் தலைப்பு வெளியீடு
சினிமா
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிட்டு படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.