
ஆண்களோட அந்த வலி இருக்கே அந்த வலி..! வீடியோ வெளியிட்ட ஆண் பாவம் பொல்லாதது படக்குழு
சினிமா
2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கி வருகிறார். இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆண் ஏன் பாவம் தெரியுமா? ஆண்களோட அந்த வலி இருக்கே அந்த வலி... என்ற வாசகத்துடன் படக்குழு இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் நாயகனிடம் மருத்துவர்கள், எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் ஆண் குழந்தைதான் பிறந்துள்ளது எனத் தெரிவிக்க, அதற்கு ஆண் எவ்வாறு கஷ்டப்படுகிறான் என்பதை கதாநாயகன் கூறும் வசனங்கள் இந்த வீடியோவில் இடம் பிடித்துள்ளன.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சித்துகுமார் இசையமைக்கிறார்.