
குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
சினிமா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர்.
திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்தது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி தமிழ் நாட்டில் மட்டும் 173 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அஜித் நடித்த திரைப்படங்களில் அதிக வசூலித்த திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மே 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.