
ஜேசன் சஞ்சய் அண்ணா ரொம்ப ஸ்வீட்டான மனிதர் - டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷ்
சினிமா
சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அவர்களின் குடும்பம் பற்றியும், இவர்களின் குடும்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இக்கதைக்களம் அமைந்துள்ளது. தொடர்ந்து அடுத்து அடுத்து சண்டை, வன்முறை நிறைந்த திரைப்படம் வெளியாகி கொண்டு இருக்கும் இக்காலக்கட்டத்தில் இம்மாதிரியான மனதுக்கு இதமாக இருக்கும் திரைப்படம் வெளியானதால் மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தில் சசிகுமார்-க்கு இளைய மகனாக கமலேஷ் நடித்துள்ளார். படத்தில் இவர் செய்யும் சேட்டைகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். இவர் வரும் காட்சிகள் திரையரங்கம் முழுவதும் சிரிப்பலையால் நிரம்புகிறது.
கமலேஷ் அடுத்ததாக ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்திலும் , ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் காஞ்சனா 4 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநரான ஜேசன் சஞ்சய் பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். அதில் " ஜேசன் அண்ணா மிகவும் இனிமையான மனிதர். இதுவரை அவரிடம் 50 கேள்விகளுக்கு மேல் கேட்டுள்ளேன். அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறுவார். அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?. அவர் செட்டில் கத்தி நான் பார்த்ததே இல்லை" என கூறியுள்ளார்.