
இது நல்ல காலத்தின் ஆரம்பம்தான் என்று எனக்குத் தெரியும் - ரெட்ரோ வெற்றிக்கு கார்த்திக் சுப்பராஜ் பதிவு
சினிமா
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இந்நிலையில் இதற்கு காரணமாக இருந்த ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் " ரெட்ரோ படக்குழு சார்பாக அனைத்து ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு, திரையரங்கிள் ஆரவாரம் செய்து உங்கள் அன்பை பொழிந்ததற்காக மிக்க நன்றி. இது நல்ல நேர தொடக்கத்தின் ஒரு ஆரம்ப புள்ளியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், சதோஷத்தையும் தருகிறது." என கூறியுள்ளார்.