
திருகோணமலையில் மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழப்பு
இலங்கை
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகனும் உயிரிழந்துள்ளனர். 47 வயதான மாமனாரும், 27 வயதான மருமகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் தமது தமது வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
இதன்போது மாமனார் எதிர்பாராத விதமாக மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து தனது மனைவியின் தந்தையை மீட்க முயன்ற 27 வயதுடைய இளைஞரும் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் .
இந்நிலையில் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.