• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல்

இலங்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்களால்  தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் ஆண்டு மாணவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 20 மாணவர்கள் அவரது விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட  நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply