• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவோடு பாகிஸ்தான் ஒத்துழைக்கனும் - அமெரிக்க துணை அதிபர் விடுத்த எச்சரிக்கை

கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் பாட்காஸ்ட் நேர்காணலில் பேசிய ஜேடி வான்ஸ், "இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பரந்த பிராந்திய போருக்கு வழிவகுக்காத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை.

மேலும், வெளிப்படையாகச் சொன்னால், பாகிஸ்தான், அவர்கள் பொறுப்பேற்கும் அளவிற்கு, தங்கள் பிரதேசத்தில் செயல்படும் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸும் இந்த சம்பவம் குறித்து பதிலளித்தார். "பிரதமர் மோடிக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. இந்த நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறினார். 
 

Leave a Reply