• Welcome to TamilsGuide
செய்திகள் 1

VJ சித்து இயக்கி நடிக்கும் புதியப்படம் - டைட்டில் ப்ரோமோ ரிலீஸ்

சினிமா

பிரபலமான தமிழ் யூடியூப் சேனலில் விஜே சித்து vlogs முக்கிய பங்கை வகிக்கும்.இவர்களின் வீடியோ அனைத்துமே மில்லியன் வியூஸ்களை அள்ளும். இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல இளைஞர்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இவர்களது வீடியோக்கள் இருப்பதால் மக்கள் இதனை கொண்டாடி ரசித்து வருகின்றனர்.

சமீபத்தில் சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களது கதாப்பாத்திரத்தை மக்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் அடுத்ததாக சித்து இயக்குன்நர் அவதாரம் எடுத்துள்ளார். இவரே படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தற்பொழுது ப்ரோமோ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ப்ரோமோ வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ப்ரோமோ வீடியோவை நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் விஜே சித்துவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் சினிமா உலகத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply