ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஒர்க்கர் என பெயர் வைப்பு
சினிமா
கடந்த ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் தீரா காதல் மற்றும் பார்ட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன . இந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பேபி& பேபி திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், ஜெய் நடிக்கும் புதிய படத்திற்கு ஒர்க்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக் ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தை வினய் கிருஷ்ணா இயக்குகிறார்.
யோகி பாபு, நாகிநீடு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















