• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட பார்வதி நாயர்- எங்க போயிருக்காங்க பாருங்க

சினிமா

கடலில் இருந்தப்படி பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பார்வதி நாயர் “உத்தம வில்லன்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின்னர், 'எங்கிட்ட மோதாதே', 'நிமிர்', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “தி கோட்” திரைப்படத்திலும் நடித்திருந்தார். அவரது நடிப்பில் “ஆலம்பனா” வெளியாகிறது.

இந்த நிலையில் பார்வதி நாயருக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நடைந்து முடிந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் மாலைதீவில் ஹனிமூனில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.     
 

Leave a Reply