சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார்
சினிமா
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு டான் பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறார். அதேவேளையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாகும்.
இந்நிலையில், மதுரையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது குடும்பத்துடன் சுற்றிப் பார்த்தார். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆர்வமுடன் சிவகார்த்திகேயன் கேட்டறிந்தார்
























