
ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாலையா
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் பாலையா என்கிற நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.