
STR49 படத்தில் இணைந்த சந்தானம் - போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு
சினிமா
சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.