• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

சினிமா

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், DD Next Level படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 
 

Leave a Reply