• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போப் பிரான்சிஸ் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது

 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை  ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள கல்வெட்டில் அவரது பெயரின் லத்தீன் வடிவமான 'ஃபிரான்சிஸ்கஸ்' மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு நேற்று (26) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்றது.

இதில் உலகத் தலைவர்கள் உட்பட இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவரது உடல் ரோமில் உள்ள செயிண்ட் மேரி மாகியோர் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது இறுதி விருப்பத்திற்கு இணங்க, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
 

Leave a Reply