போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21-ம் தேதி காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வாடிகன் சிட்டி சென்றுள்ளார். அங்கு போப் பிரான்சின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2012 முதல் போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் தனது எளிமை மற்றும் ஏழைகளிடம் காட்டிய இரக்க சிந்தைக்காக போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






















