நீதிமன்றில் ஆஜரானார் தேசபந்து
இலங்கை
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அன்றையதினம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் மகிழுந்தை ஓட்டிச் சென்றதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்துள்ளது.
அதற்கமையவே, இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























