• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது

இலங்கை

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச்  செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர ஶ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு வாயிலுக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி, குற்றச் செயலானது கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவியமைக்காக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தலல்ல தெற்கு, கந்தர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply