கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்
சினிமா
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ட்ரெண்டிங் சேலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஜீவாவுடன் தித்திக்குதேமற்றும் தனுஷுடன் தேவதையை கண்டேன்ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என ரசிகர் எதிர்பார்த்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.தற்போது 37 வயதாகும் இவர் சில நடின நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
அம்மாவான பின்னரும் இளமை மாறாமல் அப்படியே இருக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.






















