• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு தொடர்பான அறிக்கை வெளியானது

இலங்கை

இலங்கையின் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு தொடர்பான அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, ஒரு நபர் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு தேவையான குறைந்தபட்ச தொகை ரூ.16,318 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில், அதிகம் செலவாகும் மாவட்டம் கொழும்பு ஆகும். அங்கு ஒருவரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய தேவையான தொகை ரூ.17,599 ஆகும்.

மாறாக, அதிகாரப்பூர்வ வறுமை வரம்பின் குறைந்தபட்சம் மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு ஒரு நபருக்குத் தேவையான தொகை ரூ.15, 603 எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் திணைக்களம் தெரிவித்ததாவது, 2025 பெப்ரவரி மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI)  மதிப்பு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும், அதனால் தான் வறுமை வரம்பும் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தரவுகள் நாட்டின் வாழ்க்கைச் செலவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply