• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டான் பிரியசாத் மீதான துப்பாக்கி சூடு - மூவர் கைது

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினரின் வீட்டில் இருந்தபோது டான் பிரியசாத் நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் புகுந்து டான் பிரியசாத்தை சுட்டுக் கொன்றுவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த துப்பாக்கி பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்ய வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply