• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்

இலங்கை

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பினால் இலங்கையின்  பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன்போது   கொழும்பு நகரில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த  இடங்களில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம்  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்;

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி புதிதாக ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவரது நிர்வாகம் சுமார் 90 நாடுகளுக்கு  பரஸ்பர வரிவிதிப்பதற்கு தீர்மானித்தது எனவும், இலங்கைக்கு இதனூடாக 44 வீத வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது எனவும்,தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து எமது நாட்டில் பல அரசியல்தலைமைகள் மகிழ்ச்சியடைந்தனர் எனவும்,  இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடையும் என எண்ணினார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் உள்ளிட்ட குழவினர் இந்த விடயம் தொடர்பாக அமெரிக்காவில் தற்சமயம் கலந்துரையாடல்களில்   ஈடுபட்டுள்ளனர் எனவும் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படாதவாறு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும்  ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பினை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை தமக்கு  உள்ளதாகவும், இந்த நாட்டை சிறந்த பாதைக்கு இட்டுச்செல்வதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களில்  பாரிய  ஆணையை  தமக்கு வழங்கினார்கள்  எனவும், அதேபோல் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திலும் தமக்கு மீண்டும் மக்கள் ஆணை தேவைப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு நகரில் வர்த்தக முக்கியத்துவம்வாய்ந்த  இடங்களில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம்  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  எனவும், கொழும்பு நகரில் வர்த்தக முக்கியத்துவம்  வாய்ந்த பல இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன எனவும்,   ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply