கில்லி-க்கே Tough கொடுக்கும் சச்சின் திரைப்படம் - 4 நாளில் இத்தனை கோடி வசூலா?
சினிமா
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'சச்சின்'. படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், பிபாசா பாசு ஆகியோர் நடித்து இருந்தனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரித்து இருக்கிறார். படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 'சச்சின்' படம் மீண்டும் கடந்த 18-ந்தேதி திரைக்கு வந்தது. சுமார் 300 தியேட்டர்களில் உலக அளவில் வெளியான 'சச்சின்' படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர்.
படம் வெளியான திரையரங்கம் முழுவதும் ஹவுஸ்புல்லாக காட்சி அளிக்கிறது. படம் வெளியாகி 4 நாட்களில் 'சச்சின்' படம் ரூ.12 கோடி வசூலை பெற்று உள்ளது. இந்த வார இறுதிக்குள் மேலும் ரூ.10 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த 'கில்லி' படம் மீண்டும் திரைக்கு வந்து வசூலில் சக்கை போடு போட்டது. ரீ ரிலிசான ஒரு படத்துக்கு இவ்வளவு வரவேற்பா? என பலரும் வியப்புக்குள்ளாகினர். இந்நிலையில் 'கில்லி' படத்தின் சாதனையை 'சச்சின்' படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.























