ஸ்ரீ தலதா வாழிபாட்டின் நேரத்தை நீட்டிக்க முடிவு
இலங்கை
ஸ்ரீ தலதா வாழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வழிபட முடியும்.
நாடு முழுவதிலுமிருந்து கண்டிக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை திருத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகை அறிவித்துள்ளது.
இதேவேளை பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நாட்டின் பௌத்தர்களின் சிகரமான மிகவும் புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் காணும் வாய்ப்பு இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது
சிறி தலதா வாழிபாடு” எதிர்வரும் 27 ஆம் திகதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளதுடன், இதன் தொடக்க விழா கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
முதல் நாளிலிருந்து, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு சென்று புனித தந்த தாதுவை வழிபட்டு வருவதுடன், அங்கு வரும் பக்தர்களின் தாகத்தைத் தணிக்க 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது






















