ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயம்- 2வது இடம் பிடித்து அசத்திய அஜித் அணி
ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.
முன்னதாக, அஜித் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.























