• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு - வெற்றிமாறன் நகைச்சுவை பேச்சு

சினிமா

'மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளார் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் சூரி ஒரு மீனவனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

நேற்று படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றி மாறன் பேசியதாவது " சூரியால் எந்தவித கதாப்பாத்திரத்திலும் நடிக்க முடியும். ஒரு கிராமப்புறத்தில் இரூவரின் ஒரு உடல் வாகு அதற்கு பக்க பலமாக இருக்கிறது. சூரி உடல் மற்றும் மனதளவில் மிகவும் வலிமையான ஒருத்தர். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வலிமை கொண்டவர்' என நகைச்சுவையாக கூறினார்.

சூரி இப்படத்தில் முத்துகாளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 

Leave a Reply