• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது

இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் (Kehelbaddara Padme) தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கம்பஹாவில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, முதலில் இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அதே கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஐந்து சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அந்தக் குழு “கம்பாஹா ஒஸ்மான்” என்று அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரை கொல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply