• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீ தலதா வழிபாடு - மேலும் இரு ரயில் சேவைகள்

இலங்கை

ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் மேலதிக இரு ரயில் சேவைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இயக்குவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7:55 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவில் கண்டியை அடையும், அதே நேரத்தில் இரவு 8:30 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டும் ரயில் நள்ளிரவில் கொழும்பு கோட்டையை வந்தடையும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட ரயில்கள் பயணத்தின் போது ரம்புக்கனை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
 

Leave a Reply