• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை தமிழரை மணந்த பிரியங்கா- அரசியல் குடும்ப பின்னணி வெளியானது

சினிமா

தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர் இலங்கை வாழ் தமிழர் என்றும் அவர் முக்கிய அரசியல்வாதியின் குடும்பத்தை சார்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் மறுமணம்

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா.

இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி பல பிரபலங்கள் தற்போது வெள்ளத்திரையில் பிரபலமாக இருக்கிறார்கள். இதனால் பிரியங்காவும் வெள்ளத்திரைக்கு செல்வார் என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது.

இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வசிஸ்ட் என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். ஆனால் பிரியங்கா இதற்கு முன்னர் திலிப் குமார் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பதும் கூறப்பட வேண்டியது.

இலங்கை தமிழரா?

இந்த நிலையில், பிரியங்கா மணந்திருக்கும் வசி, இலங்கை வாழ் தமிழர்களிடம் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன்தானாம்.

இவர், இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறாராம். தமிழ்நாட்டில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா போயிருந்த போதுதான் வசியுடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

'எது எப்படியோ பிரியங்காவின் இரண்டாவது திருமண வாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடி மகிழ்ச்சிகளை கொடுக்க வேண்டும்"  என்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் ஆசீர்வாதமாகவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply