அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது.
இதில் கடந்த மார்ச் இறுதியில் இருந்து தற்போதுவரை 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா அல்லது சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விசா ரத்து செய்யப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், எங்களது அமைப்பால் சேகரிக்கப்பட்ட 327 சமீபத்திய விசா ரத்துகளில் 50 சதவீதம் இந்திய மாணவர்களுடையது. அதைத் தொடர்ந்து 14 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மேலும் தென் கொரியா, நேபாளம்,வங்காளதேச மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.























