ரசிகர்களுடன் கனிமா பாடலை ரீகிரியேட் செய்த பூஜா ஹெக்டே
சினிமா
நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று ரசிகர்களின் மத்தியில் கோலாகலமாக நடைப்பெற்றது. அதில் பூஜா ஹெக்டே படத்தில் இடம் பெற்றுள்ள கனிமா பாடலுக்கு 10000 ரசிகர்களுடன் இணைந்து நடனமாடி ரீல்ஸ் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






















