• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

கனடா

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு கார் மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எக்லிங்டன் அவன்யூ Eglinton Avenue East மற்றும் பிரிம்லி வீதி Brimley Road சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் மின் கம்பத்தில் மோதி ஏற்பட்ட இரண்டாவது வாகன விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை இரவு, Lake Shore Boulevard பகுதியில் இதேபோன்று ஹைட்ரோ மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்த மற்றொரு விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

Eglington பகுதியில் மேற்கே சென்று கொண்டிருந்த BMW சிடான் கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

மற்றொரு வாகனத்தை மோதிய பிறகு, கட்டுப்பாட்டை இழந்த கார், ஹைட்ரோ கம்பியில் மோதியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 
 

Leave a Reply