• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொராண்டோவில் ஆயுத முனையில் வாகனக் கொள்ளை - பெண் கைது

கனடா

டொராண்டோவில் , ஆயுத முனையில் ஒரு வாகன சாரதியிடமிருந்து காரை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விடயம் குறித்து பொலிசார் தெரிவித்ததாவது,

இந்த சம்பவம் கிப்லிங் அவன்யூ Kipling Avenue மற்றும் நோர்த்குயின் வீதி North Queen Street பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண், 2023 மாடல் சாம்பல் நிற Toyota RAV4 காரை திருடி அந்த இடத்தை விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர் காயமடைந்தாரா என்பதற்கான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு திருடப்பட்ட அந்த வாகனம் ஹோக்வில் Oakville பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் மோதி விபத்தில் சிக்கியது.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து நான்கு சந்தேகநபர்களும் கால் நடையாக தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஒருவர், பெண் சந்தேகநபர், அருகிலேயே Halton பிராந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது டொராண்டோ பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், மேலும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரிடம் உடனே தகவல் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தக் கொள்ளை மற்றும் விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

Leave a Reply