சூர்யாவின் குரலில் Love Detox - ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
சினிமா
நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை படத்தொகுப்பு செய்தது பிரபல மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்ரன். டிரெய்லர் காட்சிகள் மிகவும் வித்தியாசமான இசை மற்றும் கட்ஸ்களுடன் அமைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் லவ் டீடாக்ஸ் என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு சூர்யா மற்றும் ஷ்ரேயா இணைந்து நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். படத்தின் நேரளவு 2 மணி நேரம் 48 நிமிடம் 30 வினாடியாக உருவாகியுள்ளது.






















